“ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடுத்தாலும் தூக்கில் போடுவோம்”– டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து போவதால் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று 20 பேர் பலியாகி உள்ளனர். இதற்குக் காரணம் ஆக்சிஜன் கொடுக்காதது தான் என்று மத்திய அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆக்சிஜன் வழங்க டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு விசாரணைவை விசாரித்த நீதிபதிகள், ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடுத்தாலும் அவர்களைத் தூக்கிலிடுவோம். அத்தகைய மோசமான செயல்களில் ஈடுபடும் யாரையும் நாங்கள் விட மாட்டோம். மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.