ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது - மத்திய அரசு அதிரடி உத்தரவு!
ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்ல தடை இருக்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து, மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு -
கொரோனாவின் 2-வது அலையை கருத்தில் கொண்டு தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு சில நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மருத்துவ ஆக்சிஜனை ஒரு மாநிலத்திலிருந்து, மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தடை இருக்கக்கூடாது.
ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு உட்பட எந்த தடையும் விதிக்கக்கூடாது.
ஆக்சிஜன் ஏற்றி வரும் வாகனங்கள் தங்கு தடையில்லாமல் போக்குவரத்து செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும்.
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.