வரும் மே 1ம் தேதியிலிருந்து 18 - 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி – அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையை விட கொரோனாவின் 2ம் அலை பாதிப்புகளையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும், தடுப்பூசிகளுக்கும் தேவை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமல் நாடே சிக்கித் தவித்து வருகிறது.
கொரோனாவின் 2-வது அலை நாட்டு மக்களை பெரிதும் கவலைக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தற்போது வெளிச்சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வந்தால் தடுப்பூசி பதுக்கல் பெருமளவில் நடைபெறும். பதுக்கல்கள் அதிகரித்தால் நலிந்த மக்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இதற்கிடையில், வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மே மாதத்திலிருந்து தடுப்பூசிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மாநில அரசு சார்பில் தடுப்பூசி வாங்கி செலுத்த வேண்டும் அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.