சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் பிரியங்கா

india
By Nandhini Apr 20, 2021 10:04 AM GMT
Report

உலகிலேயே 10-வது உயரமான மலையான அன்னபூர்ணா மலையில் ஏறி முதல் இந்திய பெண்ணாக பிரியங்கா மங்கேஷ் மோஹிட் சாதனைப் படைத்துள்ளார்.

சின்ன வயதிலிருந்தே பிரியங்கா மங்கேஷ்க்கு மலையேறுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதனையடுத்து, பிரியங்கா தன்னுடைய 21-வயதிலேயே இமயமலையில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இதன்மூலம் மிக இளம் வயதில் இமயமலை சிகரத்தில் ஏறிய 3-வது நபர் என பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் பிரியங்கா | India

உலகின் மிகவும் ஆபத்தான மலைகளுள் ஒன்று அன்னபூர்ணா மலை. இந்த மலையில் பலர் ஏற முயன்று பாதியிலேயே தங்களுடைய முயற்சியை கைவிட்டு இறங்கியிருக்கிறார்கள். இந்த மலையில் இதுவரை ஏற முயன்ற 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு இந்தியர்கள் மட்டுமே அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆண்கள்.

இதனையடுத்து, கடந்த 16-ம் தேதி நேபாள நாட்டில் உள்ள 8,091 மீட்டர் உயரம் கொண்ட அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் பெண்ணாக பிரியங்கா மங்கேஷ் சாதனை படைத்திருக்கிறார்.