தனுஷ் மட்டும் போதும்...வேற எனக்கு எதுவும் தேவை இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்
நடிகர் தனுஷூடன் நடிப்பது தொடர்பாக நடிகை இந்துஜா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பன்முக கலைஞன் என்றழைக்கப்படும் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தனுஷ் இரட்டை வேடத்தில் இருக்கும் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தில் நாயகியாக மேயாதமான், மெர்குரி ஆகிய படங்களில் நடித்த இந்துஜா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்துஜா இந்தியா சினிமாவில் மிகப்பெரிய நடிகரான தனுஷூடன் நடிக்க பலர் விரும்பும் நிலையில், அவருடன் நடிக்கவேண்டுமென்றால் எனக்கு சம்பளம் கூட தேவையில்லை என கூறியுள்ளார்.
மேலும் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதையும் பெரிதாக எண்ணுவதாக இந்துஜா தெரிவித்துள்ளார்.
You May Like This