சென்னையில் இந்திராகாந்தி சிலை அகற்றம்: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி

By Irumporai Nov 27, 2022 08:22 AM GMT
Report

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இந்திரா காந்தி சிலை அகற்றப்பட்டதால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவியது.

ராஜீவ்காந்தி சிலை அகற்றம்

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே இந்திரா காந்தி சிலை ஒன்று இருந்தது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக இந்திரா காந்தி சிலையை அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை காங்கிரஸ் கட்சியினருக்கு கோரிக்கை விடுத்தது.

சென்னையில் இந்திராகாந்தி சிலை அகற்றம்: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி | Indhira Gandhi Statue Removed Near Chennai

நெடுஞ்சாலையில் பரபரப்பு 

இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை என்பதால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தகுந்த பாதுகாப்புடன் அந்த சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் .

அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் என்றும் தாங்களே இந்திரா காந்தி சிலையை அகற்றி விடுவோம் கூறியதை அடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் சிலையை அகற்றும் பணியை கைவிட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது