“என் வார்டை சென்னையின் முன் மாதிரி வார்டாக மாற்றுவேன் “ - சுயேட்சையாக களத்தில் இறங்கும் பாரதியின் புதுமை பெண்
வேடிக்கை பார்க்கும் விடலைப்பருவத்திலேயே "பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற பாரதியின் வரிகளுக்கு மெய்யாக்கும் பாரதியின் புதுமை பெண்ணாக களத்தில் இறங்கி இருக்கிறார் வர்ஷா.
இவர் அமைந்தகரையில் வசிக்கிறார். சென்னை கல்லூரியில் சமூகவியல் படித்துவிட்டு இப்போது நீர் கொள்கை மற்றும் நிர்வாகம் என்ற முதுகலை பட்டத்தை படித்துக்கொண்டு இருக்கிறார்.
இவர் இப்போது தன்னுடைய வார்டு 107-ல் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக உலக உருண்டைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
என் வார்டை முன் மாதிரியாக மாற்ற அதை செய்வேன் இதை செய்வேன் என்று அலட்சியமாக கூறமாட்டேன். நான் பண்ண போறது இதுதான் என்று தனது வாக்குறுதிகளைத் திட்டவட்டமாக கூறுகிறார்.
வார்டு 107-ஐ, சென்னையின் முன் மாதிரி வார்டாக மாற்ற,
❖ ஐ.நா சபையின் திட்டமான WaSH (Water, Sanitation & Hygiene) சிறப்பாக செயல்படுத்துவேன்.
❖ நமது பகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்களுடன் இணைந்து, அவரவர் தேவையை அறிந்து பயணிப்பேன்.
❖ 'தன்னார்வலர்கள் 107' என்ற அமைப்பினை உருவாக்கி, மக்கள் பணியில் ஈடுபடுத்துவேன் .
❖ தரமான சாலைகள் அமைத்து, தெருக்களைச் சுத்தமாக பராமரிப்பேன்.
❖ 2/3/4 சக்கர வாகனங்கள் நிறுத்த, பல தள மையங்கள் கட்டித்தர முயற்சிகள் மேற்கொள்ள,
❖ வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவேன்.
❖ குடிநீர் மேலாண்மை, கழிவுநீர் சாலையில் வெளியாவதை தடுத்தல், மற்றும் உடனடியாக சரி செய்வேன்.
❖ மத்திய மாநில திட்டங்களின் பலன்கள் அனைவரையும் சென்றடையச் செய்வேன்.
❖ மழை நீர் மேலாண்மை வாயிலாக நிலத்தடி நீர் உயரம் மேம்பட திட்டங்கள் செயல்படுத்த, மற்றும் மரங்களை நடச்செய்வேன்.
எல்லோரை போல் நீங்களும் வெறும் வாக்குறுதிகளோடு நில்லாமல் செயல் படுதுவீங்கனு மக்கள் நம்புவது போல் என்ன செய்து உள்ளீரகள் என்று கேட்டதுக்கு அவரது ஏற்பாடுகளைப் பின்வருமாறு வரிசையாக அடுக்குகிறார்.
நான் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் தான் என் பட்டப்படிப்பையே தேர்ந்தெடுத்தேன். அப்படி இருக்கையில் இந்த வாக்குறுதிகள் எல்லாம் இந்த தேர்தல் ஆரம்பத்திற்கு முன்பே நிறைவேற்ற துவங்கி விட்டேன்.
முதலாவதாக என் மக்களின் குறைகளை கேட்டறிய, வாட்ஸ் அப் செயலி மூலம் தெரிவிக்கும் மக்கள் தங்கள் குறையைக் கூறும் வகையில் ஏற்பாடு செய்து, அதை என் தேர்தல் பிரச்சாரத்தோடு சேர்த்து மக்களிடம் கொண்டு சேர்த்து கொண்டு இருக்கிறேன்.
மேலும் அவர்களது கோரிக்கையின் நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள "வார்டு 107" என்ற செயலியை உருவாக்கி கொண்டு இருக்கிறேன்.
இந்த முயற்சி முழுமை அடையவும் இனி வரும் காலகட்டத்தில் தொடரவும் மக்களோடு ஒட்டு வேண்டி இருக்கிறேன். வாக்கு வர்ஷாவுக் என்றால் வார்ட் 107-ஐ சென்னையின் முன்மாதிரி வார்டாக வளர்ச்சி அடைய வாக்கு கொடுக்கிறேன்.
நூறு இளைஞர்களை கொடுங்கள் என்று விவேகானந்தர் கேட்டது போல் இவர் இன்று உங்கள் வோட்டை கொடுங்கள் நான் என் வார்டை மாத்தி இந்த மாநிலத்திற்கு எடுத்துரைப்பேன், இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்று.
இன்று இவருக்கு வாய்ப்பளிக்க தவறினால் ஏமாற போவது இவரை மட்டும் அல்ல,
இவர் வென்றால் இவர் வழியில் நாமும் சென்று மக்களுக்கு சேவை செய்யலாம் என்று நினைத்து கொண்டு இருக்கும் நூறு இளைஞர்களின் கனவுகளை என்பதை நினைவில் கொண்டு
உங்கள் பொன்னான வோட்டுகளை எனக்கு அளியுங்கள் என்று கூறுகிறார் நம் பாரதியின் புதுமைப்பெண்.