காந்தி வேடம் அணிந்து வந்து மனு தாக்கல் செய்த சுயேச்சைக்காரர்
election
gandhi
independent
By Jon
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நேற்று அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனர் ரமேஷ் (41). இவர் காந்தி வேடம் அணிந்து சைக்கிளில் வந்தார். அப்போது தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். செல்லப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இவர் கடந்த 2019ம் நாடாளுமன்ற தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டார்.
தொடர்ந்து, அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். தற்போது 6 வது முறையாக தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். இவர் காந்தி வேடம் அணிந்து வந்ததை பார்த்த அங்கிருந்த மக்கள் பெருமிதம் கொண்டனர்.