விடுதலை போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு - ஸ்டாலின் அதிரடி
விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 18 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தேசிய கொடியேற்றி வைத்தார்.
தேசிய கொடியேற்றிய பிறகு முதலமைச்சர் மக்களிடம் உரையாற்றினார்.அப்போது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன, விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண் என்றும் பூலித் தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தில்லையாடி வள்ளியம்மை, திருவிக, நாமக்கல் ராமலிங்க, பாரதிதேசன், திருப்பூர் குமரன், ஜீவா, கேப்டன் லக்ஷ்மி, கே.பி.சுந்தராம்பாள் எனப் பல தலைவர்களின் மூச்சுக் காற்றால் கட்டப்பட்டது தான் இந்த சுதந்திர நினைவுத் தூன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தியாகிகளைப் போற்றும் மண் தமிழகம் என்பதால், விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 17 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் குடும்ப ஓய்வூதியம் மேலும் 1 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு ரூ.9000 மாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.