அதிமுக, திமுகவை ஓரம்கட்டிய சுயேட்சை வேட்பாளர் சினேகா
திமுக அதிமுகவை ஓரம் கட்டிய 22வயது பட்டதாரி சினேகாவின் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5ல், 22வயது இளம் வேட்பாளர் சினேகா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி மதுரை, கோவை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 21 மாநகராட்சிகளில் 1,373 வார்டுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடி வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5ல், 22வயது இளம் வேட்பாளர் சினேகா 494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். BE பட்டதாரியான இவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.