2வதுபோட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்திய அணி - டி20 தொடரையும் கைப்பற்றியது

Viratkohli Rohitsharma TeamIndia INDvWI Venky Bhuvi
By Petchi Avudaiappan Feb 18, 2022 05:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது டி20 போட்டியில் இந்திய் அணி வெற்றி பெற்று தொடரை  கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில்  முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனிடையே 2வது போட்டி அதே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகப்பட்சமாக விராட் கோலி, ரிஷப் பண்ட் தலா 52 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 33 விளாசினர். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2வதுபோட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்திய அணி - டி20 தொடரையும் கைப்பற்றியது | Ind Won The 2Nd T20 Against Wi In Kolkata

தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிக்கோலஸ் பூரன், ரோவ்மென் பவல் இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதேசமயம் இந்திய அணியின் மோசமான  ஃபீல்டிங்கால் கடைசி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழத் தொடங்கியது.

ஆனால் ஹர்ஷல் படேல் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசியதால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.  3வது போட்டி பிப்ரவரி 20 ஆம் தேதி இதே மைதானத்தில் நடக்கவுள்ளது.