கடைசி போட்டியில் வெற்றியுடன் விடைபெற்ற இந்தியா - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

viratkohli t20worldcup2021 INDvNAM
By Petchi Avudaiappan Nov 08, 2021 05:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டி20 உலகக்கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

டி 20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா- நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய நமீபியா அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீபன் பார்ட் 21, டேவிட் வைஸ் 26 ரன்கள் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். இறுதியில் நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நமீபியா அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். கே.எல்.ராகுல் 54, ரோகித் சர்மா 56, சூர்யகுமார் யாதவ் 25 ரன்கள் எடுக்க 15.2 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி  9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

என்னதான் இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.