டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்தியா,இலங்கை இடையோயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் விராட்கோலி,சூர்யகுமார் யாதவ்,ரிஷப் பந்த் உள்ளிட்டோர் ஓய்வுக்கு சென்றதால் ருதுராஜ் கெய்க்குவாட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா,ருதுராஜுக்கு கையில காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்தார்.
இதையடுத்து அவரை டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதில் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
You May Like This