‘’ சூரத்தேங்கா அட்ரா அட்ரா ‘’ : மொகாலி டெஸ்ட், இந்தியா அணி அபார வெற்றி

Ashwin Jadeja INDvSL testMatch
By Swetha Subash Mar 06, 2022 11:11 AM GMT
Report

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. 4ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175* ரன்களும், ரிஷப் பண்ட் 96 ரன்களும் எடுத்தனர்.   

இதனையடுது தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி, போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

குறிப்பாக பேட்டிங்கில் 175 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சிலும் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் வெறும் 174 ரன்களுக்கே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  

பின்னர், இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா ஐந்து விக்கெட் வீழ்த்த இலங்கை அணி 174 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இலங்கை அணியை தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தார். 

அரைசதம் அடித்த டிக்வெல்லா கடைசி வரை போராடினாலும், அதற்கு எந்தவித பலனும் கிடைக்காமல் போனது. இலங்கை அணி 60 ஓவரில் 178 ரன்கள் எடுத்து ஆல்-அவட் ஆனது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

. 2-இன்னிங்சில் டிக்வெல்லா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். 

இலங்கை அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.