2வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கிட்டத்தட்ட 20 போட்டிக்கு இணையாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று அதே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இலங்கை அணியும் களம் இறங்கும் என்பதால் ரசிகர்களுக்கு இப்போட்டி மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.