வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி - டெஸ்ட் தொடரை இழக்கும் இந்தியா

rishabhpant VIRAT KOHLI INDvSAF
By Petchi Avudaiappan Jan 13, 2022 04:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. 

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 9 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில் இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 29 ரன்களும், ரிஷப் பண்ட் 100 ரன்களும் எடுக்க இந்திய அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய அந்த அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 111 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.