நீங்க தான் அடுத்த டிராவிட்டா சார்..? புஜாராவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Test Match Cheteshwar Pujara IND Vs SA
By Thahir Dec 26, 2021 10:26 PM GMT
Report

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டாகியுள்ள புஜாரா இந்திய ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று (26.12.21) துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுலும், மாயன்க் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரில் இருந்தே தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சை ஈசியாக எதிர்கொண்ட கே.எல் ராகுல் – மாயன்க் அகர்வால் கூட்டணி இலகுவாக ரன்னும் குவித்தது.

மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது பொறுமையை சோதித்த கே.எல் ராகுல் – மாயன்க் அகர்வால் கூட்டணியை போட்டியின் 41வது ஓவரில் நிகிடி பிரித்தார்.

மாயன்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்த போது நிகிடியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.

நீங்க தான் அடுத்த டிராவிட்டா சார்..? புஜாராவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் | Ind Vs Sa Test Match Cheteshwar Pujara

இதன்பின் களத்திற்கு வந்த சட்டீஸ்வர் புஜாரா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்தநிலையில், தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா இந்த போட்டியிலும் டக் அவுட்டாகி வெளியேறியதால் கடுப்பான ரசிகர்கள் அவரை மிக கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.

இனி வரும் போட்டிகளில் புஜாராவிற்கு இடம் கொடுக்க கூடாது என காட்டமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.