ரன்னுக்காக பண்ட் ஒடிய ஓட்டம் ,ராகுல் பாதி மைதானத்தில் ஆட்டம் : வைரலாகும் வீடியோ

rahul viralvideo indvssa
3 மாதங்கள் முன்

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், பார்ல் நகரில் நடைபெற்ற முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் இழந்து ஒரு நாள் தொடரையும் இழந்துள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பண்ட் இந்திய அணிக்காக போராடி ரன் குவித்தபோது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று அரங்கேறியது. ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய கேசவ் மஹாராஜ் பந்தை எதிர்கொண்ட பண்ட், ஒரு பந்து வீச்சை ஆன் சைடில் தொட்டுவிட்டு ரன் எடுக்கத் முயற்சி செய்தார்.

அப்பொழுது தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா குறுக்கே பாய்ந்து பந்தை எடுக்க ஓடினார்.

அதைப் பார்த்த பண்ட் ஓடாமல் கிரீஸில் நின்று கொண்டார். இதை அறியாமல் எதிர்முனையில் இருந்து ஓடிவந்த ராகுலும் எதிர் எதிரே சந்தித்து கொண்டு ஒரே கிரீஸில் நின்றனர்.

ஆனால் நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் வீசப்பட்ட த்ரோவை மஹாராஜா விட்டதால் கே.எல்.ராகுல் மீண்டும் ஓடிவந்து ரன் அவுட்டில் இருந்து தப்பித்தார். தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.