டிராவிட் போட்ட கண்டிஷன்.,!! கலக்கத்தில் இந்திய வீரர்கள்..!!

Indian condition Rahul Dravid To ind-vs-sa Batsman
By Thahir Jan 10, 2022 12:42 AM GMT
Report

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. அதற்கான வாய்ப்பு இம்முறை கிடைத்துள்ளது.

டிவில்லியர்ஸ், அம்லா, டுபிளஸிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத தென்னாப்பிரிக்காவை முதல் டெஸ்டில் இந்தியா வீழ்த்தியது.

ஆனால் தோல்வியே சந்திக்காத ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். இது பயிற்சியாளர் டிராவிட்டை வெறுப்படைய செய்துள்ளது.

இதனால், கேப் டவுன் டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். ஆனால் கேப் டவுன் ஆடுகளம் இந்தியாவுக்கு மோசமாகவே அமைந்துள்ளது.

இதுவரை இந்தியா உள்பட எந்த ஆசிய அணியும் வென்றது இல்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது முக்கியமாகும்.

இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு ராகுல் டிராவிட் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். நீங்கள் என்ன செய்வீர்கள், எது செய்வீர்கள் என தெரியாது.

ஒவ்வொரு வீரரும் கறைந்தபட்சம் 50 பந்துகளையாவது ஆட்டமிழப்பதற்கு முன் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வெறும் பந்துகளை எதிர்கொண்டால் போதுமா? ரன்களை அடிக்க வேண்டாமா என நீங்கள் கேட்கலாம். ஆனால் டிராவிட் போட்ட கண்டிஷனுக்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் ஒவ்வொரு வீரரும் 50 பந்துகளை எதிர்கொண்டால், பிறகு பந்து எப்படி ஸ்விங் ஆகிறது, பேட்டுக்கு எப்படி வருகிறது என்பதை கணிக்க முடியும் மேலும் முதல் 3 வீரர்கள் தலா 50 பந்துகளை எதிர்கொண்டால், பந்தும் பழுசாகிவிடும். பின்னால் வரும் வீரர்கள் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும்.

டிராவிட்டின் இந்த விதி மூலம் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இன்னிங்ஸ் தொடக்கத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழக்க மாட்டார்கள். டிராவிட்டின் கண்டிஷனை இந்திய வீரர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.