முதல் டி20 போட்டி - அணியில் யார் யாருக்கு இடம்?
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
டி20 தொடர்
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர்.
இந்திய அணியின் திட்டம்
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியின் வீரர்கள் டெல்லியில் நேற்று வலைப் பயிற்சியை தொடங்கினர். விராட் கோலி,ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
First practice session ✅
— BCCI (@BCCI) June 6, 2022
Snapshots from #TeamIndia's training at the Arun Jaitley Stadium, Delhi. ? ? #INDvSA | @Paytm pic.twitter.com/6v0Ik5nydJ
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கலக்கிய உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் இருவரில் யார் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் மிகவும் வேகமாக பந்துவீசிய நபர்களில் ஒருவர் உம்ரான் மாலிக். அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை செய்தார். அதேபோல் பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசினார்.
அவரும் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று வலை பயிற்சியில் அதிக நேரம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
அத்துடன் உம்ரான் மாலிக் பந்துவீச்சை சுமார் 20 நிமிடங்கள் வரை ராகுல் டிராவிட் பார்த்ததாக தெரிகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 9ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துவிடும். ஆகவே அதற்கு இந்திய அணியின் வீரர்கள் தேர்வு ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
கே.எல்.ராகுல் தலைமையிலான அணியில் பந்துவீச்சில் அதிகமாக கவனம் செலுத்தப்படும் என்று கருதப்படுகிறது. பேட்டிங்கிற்கு இளம் வீரர்களுடன் ஹர்திக் பாண்ட்யா, ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் கைகொடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.
பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்டோர் அணியில் இல்லை. எனவே பந்துவீச்சில் இந்திய அணி அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.