ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு கொடுத்தது ஏன்…? விளக்கம் கொடுத்த ராகுல் டிராவிட்

Rahul Dravid Rohit Sharma
By Irumporai Jun 09, 2022 12:30 AM GMT
Report

தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை ராகுல் டிராவிட் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்களின் பனிச்சுமையை குறைப்பதற்காக தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அதிகமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால கே.எல் ராகுல் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.  இந்த நிலையில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டதற்கான காரணத்தை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இது குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், “ரோஹித் சர்மா மூன்று விதமான போட்டிகளுக்கான இந்திய அணியின் முக்கியமான வீரர். ஒருவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும், ஓய்வே இல்லாமல் விளையாடி கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல.

அது அவர் மீது அதிக அழுத்தத்தை மட்டுமே கொடுக்கும். பனிச்சுமையை குறைப்பதற்காகவே ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடனும், புத்துணர்சியுடனும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார்.