சார் , நம்ம பசங்க சார் யாரு ? இதெல்லாம் அசால்டு - ஜாஹிர் கான் நம்பிக்கை

zaheerkhan indvssa
By Irumporai Dec 22, 2021 12:55 PM GMT
Report

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என முன்னாள் வீரரான ஜாஹிர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26ம் தேதி துவங்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதால் இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

அதே போல் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

. ரசிகர்களை போன்றே இந்த தொடருக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் முன்னாள் வீரர்கள் பலர், இந்த தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.   

இந்தநிலையில், இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜாஹிர் கான் பேசுகையில், “இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சமீபகாலமாக தொடர்ந்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நமது வேகப்பந்து வீச்சாளர்களால் சரியான கோட்டில் பந்துவீச முடியும், தேவைக்கு ஏற்ப பவுன்சரும் சிறப்பாக வீச முடியும்.

வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை கூட குறை சொல்ல முடியாது. உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, பும்ராஹ், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் என அனைவருமே தங்களது பங்களிப்பை தொடர்ந்து சரியாக செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்