#IndvsPak உலகக்கோப்பை போட்டி....ஒரு டிக்கெட் 50 லட்சமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..?
நடைபெறவுள்ள இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை தனியார் இணையத்தளத்தில் 50 லட்சத்திற்கு விற்பனையாகும் நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான்
கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை காண தான் ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டுவார்கள்.உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அணிகளுக்கு இடையேயான போட்டிகள், ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் மட்டுமே நடத்தப்படுவதும் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க பெரிய காரணமாக திகழ்கிறது.
வரும் உலகக்கோப்பை போட்டி, இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 14-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையில் மோதவுள்ளன.
50 லட்சமா?
உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது முதலே பெரும் அதிர்வலைகளை ரசிகர்கள் மத்தியில் அது ஏற்படுத்தியுள்ளது. காரணம் டிக்கெட் விற்பனையாகும் விலை. இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதவுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் டிக்கெட் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆன்லைனில் முதன்மையான தனியார் டிக்கெட் விற்பனை இணையதளங்களில் ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய இரண்டு குறிப்பிட்ட தேதிகளில் டிக்கெட் விற்பனை துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் முழுமையான விற்பனையை விற்று தீர்ந்துள்ளன.
இருப்பினும், டிக்கெட் விற்பனைக்கான இரண்டாம் நிலை சந்தைகள் அதிகப்படியான விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்கின்றன. உதாரணமாக, ஒரு சவுத் பிரீமியம் வெஸ்ட் பே டிக்கெட் தற்போது ₹ 19.5 லட்சத்தில் ஆன்லைன் விளையாட்டு டிக்கெட் தளமான Viagogo இல் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதே போல, மேல் அடுக்குக்கு ஸ்டாண்ட்களில் டிக்கெட் ஒன்று ₹ 57 லட்சத்திற்கு விற்பனையாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.