சாதனை படைத்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

INDVPAK T20 WORLDCUP
By Petchi Avudaiappan Nov 09, 2021 06:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி  புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. 

குறிப்பாக இதுவரை டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியே தழுவியது இல்லை என்ற சாதனை இந்த தொடரில் முடிவுக்கு வந்தது.

இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருந்தாலும், இமாலய சாதனையை படைத்துள்ளது. அதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி தான் இதுவரை பார்க்கப்பட்ட சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலேயே மிக அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்த போட்டி என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த போட்டியை உலகெங்கும் சுமார் 16.70 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இ்ந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டி தான் ரசிகர்களால் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது இந்தப் போட்டியை 13.60கோடி ரசிகர்கள் பார்த்தனர்.

தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.