மீண்டும் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி..அதிகாரபூர்வமாக அறிவிப்பு
மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டி மீண்டும் நடத்தப்படவுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
ஆசிய கோப்பை போட்டியில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி கடந்த 2-ஆமா தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா 11, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 14, சுப்மன் கில் 10 என சொற்ப ரன்களை எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க 5-தாவது விக்கெட்டிற்கு கை கோர்த்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 81 பந்துகளில் 82 ரன்களை எடுத்து இஷான் கிஷன்னும், ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் ஷாகின் ஷா அப்ரிடி 10 ஓவர்களில் 2 மைடன்களுடன் இந்த ஆட்டம் பின்னர் மழையில் கைவிடப்பட்டது ரசிகர்களை மிகவும் ஏமாற்றியது.
மீண்டும் நடத்தப்படவுள்ளது
இந்த போட்டி மழையால் ரத்தான நிலையில், இந்த போட்டிக்கு மட்டும் தற்போது விலக்கு அளிக்கப்பட்டு போட்டி reserve day அதாவது மற்றொரு நாளிற்கு போட்டி மாற்றப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு அன்று இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆசியக்கோப்பை இறுதி போட்டியிலும் மழை குறுக்கிட்டால், போட்டிக்கு reserve day அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.