சாம்பியன்ஷிப் டெஸ்ட்: இந்திய பந்து வீச்சை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 116 ரன்கள் பின் தங்கியுள்ளது.
நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.