காத்திருக்கும் மழை: டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடரும் சோகம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இப்போட்டி நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இன்னிக்கி வீரர்கள் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். ரோகித் சர்மா 34, சுப்மன் கில் 28, புஜாரா 8 எடுத்து ஆட்டமிழக்க போதிய வெளிச்சம் இன்மை காரணமாக 64.4 ஓவரில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 45 ரன்களுடனும், ரஹானே 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. ஆனால் முதல் செஷனில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றைய போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil