INDvsNZ: சச்சின் கூட படைக்காத சாதனை; விளாசிய விராட் கோலி - என்ன செய்தார் தெரியுமா?
50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
INDvsNZ
உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்தார்.
சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி இணைந்து சிறப்பாக ஆடியது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை கடந்தது.
கோலி சாதனை
தொடர்ந்து, ஃபெர்குசன் வீசிய 41.4வது பந்தில் 2 ரன்களை விளாசிய விராட் கோலி, 106 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவர் சதம் விளாசிய பின் வான்கடே மைதானத்தில் இருந்த ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.