IND vs NZ : அதிரடி காட்டிய இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் இலக்கு

By Irumporai Nov 25, 2022 05:42 AM GMT
Report

முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள்இலக்காக வைத்துள்ளது இந்திய அணி

இந்தியா vs நியூசிலாந்து

  இன்றைய முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நடக்கின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

20 ஓவர் தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தினார். ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் உள்ளார்.

தவான் கில் ஜோடி அசத்தல்

ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் அதிகமான இளம் வீரர்களுடன் இந்தியா களம் இறங்கியுள்ள நிலையில் ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் களம் இறங்கியுள்ள தவான் - கில் ஜோடி 124 ரன்கள் எடுத்தனர்.

307 ரன்கள் இலக்கு

இருவரும் அரைசதம் அடித்த நிலையில் அணியின் ஸ்கோர் 124 ரன்களாக இருந்த போது, சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். அதனை அடுத்து ஷிகர் தவானும் அவுட் ஆக இந்திய அணி 124 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது.

அதன் பின்னர் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் அடுத்தடுத்து பெர்குஷன் பந்து வீச்சில் அவுட் ஆக, இந்திய அணி மேலும் தடுமாறி வந்தது. அதன் பின்னர், சஞ்சு சாம்சன் ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து அணியை வலுவாக்கி வந்தனர்.

அதன் பின்னர் இந்த கூட்டணியும் பிரிய, நிலைத்து ஆடி வந்த ஸ்ரேயஸ் 75 பந்தில் 4 ஃபோர், 4 சிக்ஸர் உட்பட 80 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் குவித்து 307 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது