சுற்றும் புவி இவன்தானோ முற்றும் பகை அழிப்பானோ : டெஸ்ட் போட்டியில் அஷ்வினின் அசத்தல் சாதனை

ashwin indvsnz 2ndtest 50wickets
By Irumporai Dec 05, 2021 12:41 PM GMT
Report

2021ம் ஆண்டு மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த  ஆண்டின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக வலம் வருகிறார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 539 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினே கைப்பற்றி அசத்தியுள்ளர். 

சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் நியூசிலாந்தின் டாம் லாதம், வில் யங் விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 2021ம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அஸ்வின் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 426 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அஸ்வின்

2021ம் ஆண்டில் மட்டும் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இதுவரை 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இவற்றில் 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பாண்டின் சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்சில் 61 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 207 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

அஸ்வினுக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி 44 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் ஹசன் அலி 39 விக்கெட்டுகளுடன் உள்ளனார்.