இந்திய டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார்? பிசிசிஐ விளக்கம்

Indian Cricket Team Gautam Gambhir England
By Sumathi Jun 16, 2025 01:00 PM GMT
Report

இந்திய டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.

யார் பயிற்சியாளர்?

இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

vvs laxman - gautam gambhir

முதல் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு

பிசிசிஐ பதில்

இந்நிலையில் அவருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன் தற்காலிக தலைமை பயிற்சியாளராக இந்திய அணியுடன் இணைந்துள்ளார். எனவே, அவர்தான் இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக பயிற்சியாளரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார்? பிசிசிஐ விளக்கம் | Ind Vs Eng Test Gautam Gambhir Vvs Laxman Coach

இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், "முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கௌதம் கம்பீர் திரும்பி விடுவார். அவரது தாயார் தற்போது ஐசியூவில் இருந்தாலும்,

மருத்துவர்கள் அவரது உடல்நிலை முன்னேறி வருவதாக கூறியிருக்கின்றனர். எனவே கௌதம் கம்பீர் சில நாட்களில் மீண்டும் இங்கிலாந்து செல்வார்," எனக் கூறியுள்ளார்.