5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகல் - விராட் கோலி கலக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ளது.4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நடப்பு டெஸ்ட் தொடரில் 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் மத்தியில் அதிக பந்துகளை (866) பிடித்த வீரரும் அதிக ரன்கள் (368) குவித்த வீரர் ரோகித் சர்மா மட்டுமே. அதேசமயம் நடப்பு டெஸ்ட் தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 52.57 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 42.49 ஆக உள்ளது.

4வது டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மூலமாக, இந்திய மண்ணை கடந்து வெளி மண்ணில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்தார்.

மிக அற்புதமாக இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவர் சிறிய காயம் காரணமாக 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

அவருடன் இணைந்து புஜாராவும் 5வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல் கூடுதல் வெளியாகியுள்ளது. தற்பொழுது ரோகித் சர்மா இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றால் அவரது இடத்தில் எந்த வீரர் விளையாடப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு மாற்று வீரராக விளையாடப் போகும் வீரர்கள் இந்த மூவரில் ஒருவர் என நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்