4வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினை ஓரம் கட்டிய விராட் கோலி
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியில் பட்லர், சாம் கரணுக்குப் பதிலாக போப், வோக்ஸ் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்த டெஸ்ட் போட்டியிலாவது அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவரை ஓரம் கட்டியிருக்கிறார் விராட் கோலி.