நம்ம விராட் கோலியா இது...இப்படி பண்றீங்களே சார் - வைரலாகும் புகைப்படம்
கிரிக்கெட் களத்தில் பிஸியாக ரன்களை சேர்ப்பதில் இந்திய கேப்டன் விராட் கோலி வல்லவர். இந்திய அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார்.
இப்போது கூட இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவை சரித்திர சாதனையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஓவல் டெஸ்ட் போட்டியில் அவரது செயல் நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது. அந்த சம்பவம் ஓவல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு நடந்துள்ளது.
ஆட்டத்திற்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என இருவரும் தனித்தனியே பெவிலியன் நோக்கி திரும்பியுள்ளனர்.
ஜோ ரூட் முன்னதாகவும், விராட் கோலி பின்னதாகவும் சென்றுள்ளார். அப்போது அவர்கள் கடந்து சென்ற பாதையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று யாரோ தூக்கி வீசியதில் கீழே விழுந்து கிடந்துள்ளது.
அதை ஜோ ரூட் கண்டும் காணாமல் கடந்து சென்றுள்ளார். கோலி கீழே விழுந்திருந்த அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அந்த காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அதோடு அது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ இப்போது பலர் மனங்களையும் வென்றுள்ளது.