இந்திய அணியை பழி தீர்க்குமா இங்கிலாந்து - பதற்றத்தில் விராட் கோலி

Cricket Virat Kohli INDvsENG Jos Buttler
By Thahir Sep 08, 2021 05:10 AM GMT
Report

மான்செஸ்டரில் வரும் 10-ம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

4-வது போட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், ஆப் ஸ்பின்னர் ஜேக் லீச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியை பழி தீர்க்குமா இங்கிலாந்து - பதற்றத்தில் விராட் கோலி | Ind Vs Eng Cricket Test Match Virat Kohli

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளது.

ஓவலில் நடந்த 4-வது ெடஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியபின் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

மான்செஸ்டரில் நடக்கும் கடைசி டெஸ்டையும் வென்று 3-1 என்ற கணக்கில் வெல்ல கோலி படை காத்திருக்கிறது, அல்லது குறைந்தபட்சம் டிரா செய்தாலே டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும்.

இந்நிலையில் 5-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யபப்பட்டுள்ளது. மான்செஸ்டர் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஜேக் லீச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜேக் லீச் கடந்த இந்தியா, இலங்கை தொடருக்குப்பின் விளையாடவில்லை என்பதால், இந்த டெஸ்ட்போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். 4-வதுடெஸ்டில் அணியில் இடம் பெறாத ஜாஸ் பட்லர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1986-ம் ஆண்டுக்குப்பின் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இரு டெஸ்ட் தொடர்களை இழந்தது இல்லை. ஏற்கெனவே நியூஸிலாந்திடம் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இழந்துவிட்டது, இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்துவிடக்கூடாது என்ற விழிப்புடன் இங்கிலாந்து அணி இருக்கிறது.

இந்திய அணியை பழி தீர்க்குமா இங்கிலாந்து - பதற்றத்தில் விராட் கோலி | Ind Vs Eng Cricket Test Match Virat Kohli

பட்லர் வருகை இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் இதை கேப்டன் கோலி எப்படி கையாள இருக்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து அணி விவரம்: ஜோ ரூட்(கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜான் பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஒலே போப், ஒலே ராபின்ஸன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்