தப்பித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்- 5 வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி தொடங்கும்

Test Match INDvsENG ENGvsIND
By Thahir Sep 10, 2021 06:15 AM GMT
Report

5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

தப்பித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்- 5 வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி தொடங்கும் | Ind Vs Eng Cricket Test Match

இந்நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால், இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக திட்டமிட்டபடி 5-வது போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்' என முடிவு வந்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் எந்த சிக்கலும் ஏற்படாது கூறப்படுகிறது.