நான்காவது டெஸ்ட் போட்டி டாஸ் வென்றது இங்கிலாந்து - பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா
ஓவல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஷமி, இஷாந்த் சர்மா இல்லை இவர்களுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் ஆலி பாப், கிறிஸ் வோக்ஸ் பிளேயிங் லெவனில் உள்ளனர்.
முதல் நாளில் பிட்சில் கொஞ்சம் ஈர்ப்பதம் இருக்கும் மேகமூட்ட வானிலையில் பந்து ஸ்விங் ஆகி பிட்ச் ஆகும் போது லேட் ஸ்விங் வாய்ப்புள்ளது. இதனால் ஜோ ரூட் பீல்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் போட்டியில் பின்வரும் போட்டியாளர்கள் களம் இறங்கியுள்ளனர்
இந்திய அணி: ரோகித் சர்மா, ராகுல், புஜாரா, கோலி, ரகானே, ரிஷப் பந்த், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, உமேஷ் யாதவ், சிராஜ்.
இங்கிலாந்து: பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜோ ரூட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரெய்க் ஓவர்டன், ஆலி ராபின்சன், ஆண்டர்சன்