முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 432 ரன்கள் குவிப்பு

Cricket Test Match INDvsENG
By Thahir Aug 27, 2021 11:51 AM GMT
Report

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 78 ரன்னில் சுருண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 423 ரன்கள் குவித்து மொத்தம் 345 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

3 ஆம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியது. மேற்கொண்டு 9 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி கைவசம் இருந்த 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி  432 ரன்கள் குவிப்பு | Ind Vs Eng Cricket Test Match

இதனால், 354 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 121 ரன்கள் குவித்தார். பந்து வீச்சில் இந்திய அணியில் முகம்மது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி தனது 2 வது இன்னிங்சை துவங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி 354 ரன்கள் பின் தங்கியிருப்பதால், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கை வலுவாக ஓங்கியுள்ளது.