இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம் - ஜஸ்பிரிட் பும்ரா ஓபன் டாக்

Jasprit Bumrah INDvsENG EMGvsIND
By Thahir Sep 09, 2021 03:53 AM GMT
Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சமீபத்தில் விளையாடி முடித்த 4வது டெஸ்ட் போட்டியில் இறுதி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியடைந்தது.

இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற தாகூர் மிக முக்கிய காரணமாக விளங்கினார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விளக்கம் அளித்துள்ளார். 

இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம் - ஜஸ்பிரிட் பும்ரா ஓபன் டாக் | Ind Vs Eng Cricket Jasprit Bumrah

தாகூர் தன்னுடைய இரண்டு இன்னிங்சிலும் மிக அற்புதமாக தன்னுடைய பேட்டிங் மூலமாக மிகப்பெரிய மாற்றத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணிக்கு ஒரு நல்ல ஸ்கோரை அவரது அரை சதம் மூலமாக பெற்றுக் கொடுத்தார். அவர் கொடுத்த அந்த நம்பிக்கை மூலமாகவே இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்சில் எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது.

முதல் இன்னிங்சை போலவே 2வது இன்னிங்சிலும் அவர் தன்னுடைய அரை சதம் மூலமாக மிகப்பெரிய டார்கெட்டை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க உதவினார். 

பேட்டிங்கில் மட்டுமின்றி இங்கிலாந்து அணி டார்கெட்டை அற்புதமான நிலையில் சேஸ் செய்துகொண்டிருந்த பொழுது முதல் விக்கெட்டை அவர் கைப்பற்றி எங்களுக்கு நம்பிக்கை வழங்கினார்.

அதே சமயம் அவர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் விக்கெட்டை கைப்பற்றி மேலும் நம்பிக்கையை வழங்கியதாக பும்ரா தாகூர் குறித்து பெருமையாக தற்பொழுது கூறியுள்ளார்.

ஐந்தாவது நாள் ஆன கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் மிக சிறப்பாக விளையாடி கொண்டிருந்தது. உணவு இடைவேளைக்கு பின்னர் மிக வேகமாக நெருக்கடியை இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொடுக்க நினைத்தோம்.

நாங்கள் நினைத்தது நிறைவேறியது என்றும், அடுத்தடுத்து இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கட்டுகளை எங்களால் கைப்பற்ற முடிந்தது என்றும் பும்ரா தற்பொழுது கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான போப் மற்றும் பேர்ஸ்ட்ரோ விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றி பும்ரா மிகப் பெரிய நெருக்கடியை இங்கிலாந்து அணிக்கு ஏற்படுத்தினார்.

மேலும் இந்தப் போட்டியில் அவர் கைப்பற்றிய இந்த இரண்டு விக்கெட்டுகள் மூலமாக, தனது டெஸ்ட் கேரியரில் 24 போட்டிகளிலேயே அதிவேக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நம்பர்கள் மற்றும் சாதனைகள் குறித்து பெரிய அளவில் நான் கவனம் செலுத்த மாட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்காக நீண்டகாலம் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய முழு நோக்கம். அதற்காக நான் உணவு மற்றும் உடற்பயிற்சி என அனைத்து ரீதியிலும் தயாராகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன் எப்படி விளையாடினோம் என்பதையும் தற்பொழுது விளையாடுவதன் மூலமாக பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து சிந்தித்தால், எண்ண ரீதியில் சோர்வடைய அதிக வாய்ப்புள்ளது.

எனவே நான் தற்பொழுது என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

இனி வரும் டெஸ்ட் போட்டிகள் அல்லது சர்வதேச போட்டிகள் குறித்தோ, ஐசிசி உலக கோப்பை தொடர் போட்டிகள் குறித்து என்னுடைய நோக்கம் இருக்காது.

தற்பொழுது என்ன போட்டி நடக்கிறது அதில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதிலேயே என்னுடைய முழு கவனமும் எப்பொழுதும் இருக்கும் என்று இறுதியாக கூறி முடித்தார்.