வரலாறு படைக்க காத்திருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகள்: 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிய, 2வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே 3வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் புதிய வரலாறு ஒன்றை படைக்கவுள்ளது.
இதுவரை 6 முறை லீட்ஸ் மைதானத்தில் நேருக்கு நேர் மோதியுள்ள இரு அணிகளில் ங்கிலாந்து அணி மூன்று முறையும், இந்திய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் (1986, 2002 ஆம் ஆண்டு) இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் 19 வருட கால காத்திருப்பை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இங்கிலாந்து அணியும், 34 வருட வெற்றி பயணத்தை தொடர்ந்து வழிநடத்தி செல்ல இந்திய அணியும் தீவிர முனைப்பு காட்டும் என்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.