இந்திய அணியில் 3 வீரர்கள் மாற்றம்; தமிழக வீரர் நீக்கம் - என்ன காரணம்?
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
IND vs ENG
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.ஏனென்றால் முதலில் தான் ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதாரணமாக இருக்கிறது. போகப்போக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது.
எங்கள் அணியில் இன்று மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் அணிக்குள் வந்திருக்கிறார்கள். பும்ரா இந்த டெஸ்டில் விளையாடவில்லை. மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
3 மாற்றம்
அங்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால் இந்த டெஸ்ட்டை விட மூன்றாவது டெஸ்ட் தான் பும்ரா எங்களுக்கு தேவைப்படுவார் என்று நினைத்தோம்.நாங்கள் இன்றைய ஆட்டத்தில் குல்தீப் பயன்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் முதல் டெஸ்டில் எங்களுடைய கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை.
இதன் காரணமாக பேட்டிங் பலம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றங்களை செய்து இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் தான் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.