மிரட்டிய ஜடேஜா - அஸ்வின் - சூழலில் சுருண்ட இங்கிலாந்து..! ஜெய்ஸ்வால் அபாரம்
இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியா அணியின் சூழலில் சிக்கியது.
முதல் டெஸ்ட்
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கி அந்த அணி பேட்டர்களுக்கு இந்திய அணி பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை உண்டாக்கினர். பென் ஸ்டோக்ஸ்(Ben Stokes) மட்டும் தாக்குப்பிடித்து 70 ரன்களை குவித்தார்.
மற்றபடி அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் ஓப்பனர்கள் ஜாக் கிராலி(Zack Crawley) 20 ரன், பென் டக்கெட்(Ben Duckett) 35 ரன், ஜானி பெர்ஸ்டோவ்(Jonny Bairstow) 37 ரன்களை குவித்தனர்.
இந்தியா அணியை பொறுத்தமட்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, அக்சர் படேல் மற்றும் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனது முதல் இன்னிங்சில் இந்தியா அணி 23 ஓவர்களில் 119 ரன்களை ஒரு விக்கெட் இழந்து குவித்துள்ளது. குவித்துள்ளது. இந்தியா அணி தரப்பில் ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதத்தை கடந்து 76 ரன்களை குவித்தார்.
கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களை ஆட்டமிழக்க, சுப்மன் கில் 14 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச்(Jack Leach) 1 விக்கெட் வீழ்த்தினார்.