இது தான் என்னோட ஆட்டம் : பீல்டிங்லையும் கிங் என நிரூபித்த கோலி - வைரலாகும் வீடியோ

Virat Kohli Viral Video
By Irumporai Oct 17, 2022 10:37 AM GMT
Report

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் ஆஸ்திரேலியாவில் தொங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா

 இந்தியா அணி இன்று நடைபெற்ற  முதல் பயிற்சிப் போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.

இந்திய அணி வெற்றி

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 171 ரன்கள் எடுத்திருந்தபோது பின்ச் 76 ரன்களில் வெளியேறியபோது, ஆஸ்திரேலியா அணியின் வெற்றிபாதை தகர்ந்தது.

இது தான் என்னோட ஆட்டம் : பீல்டிங்லையும் கிங் என நிரூபித்த கோலி - வைரலாகும் வீடியோ | Ind Vs Aus Warm Up Virat Kohli Felding

தொடர்ந்து 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


விராட் கோலி

இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே விராட் கோலிதான்.

இன்றைய போட்டியில் மட்டும் கோலி, இரண்டு கேட்ச், ஒரு ரன் அவுட் செய்தார். அதில் ஒரு கேட்ச் மற்றும் ரன் அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.