IND vs AUS: கேஎல் ராகுலுக்கு பதில் இவருக்கு வாய்ப்பு?
பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
3வது போட்டி
ஆஸ்திரேலிய அணியுடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணி தற்போது தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது, இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரை மகத்தான பேட்டிங் சாதனைகளை பதிவு செய்வதில் உச்சத்தில் உள்ளனர். ஜூன் 7, 2023 ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ஆவலாக உள்ளனர்.
கில்?
தொடரில் 3-1, 4-0 என்று வெற்றி பெரும் பட்சத்தில் தகுதி பெற முடியும். மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் விளையாடப்படுகிறது. மேலும், தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வரும் ராகுலுக்கு பதிலாக கில் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (Wk), இஷான் கிஷன் (Wk), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.