"இந்திய அணியின் பேட்டிங் உயர்தரமாக இருக்கிறது, எதிர்காலமும் பாதுகாப்பானதாக இருக்கிறது" - இங்கிலாந்து முன்னாள் வீரர் புகழாரம்

cricket match u19 junior world cup ind vs aus india won
By Swetha Subash Feb 03, 2022 11:01 AM GMT
Report

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய கேப்டன் யாஷ் தல் சதம் அடித்தார்.

19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 ரன்னில் அவுட்டானார்.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறுகையில்,

“ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் உயர்தரமாக இருக்கிறது. இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது. யாஷ் தல் இணையில்லாதவராக இருக்கிறார்” என பாராட்டியுள்ளார்.