IND vs AUS: 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
இந்தியா-ஆஸ்திரேலியா
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம், இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்து ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்து அசத்தினர்.
இதனையடுத்து 400 ரன்கள் வெற்றி அதிகபட்ச இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் 9வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இந்தியா வெற்றி
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் தடைபட்டது. இதன் காரணமாக 33 ஓவரில் 317 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எனவே இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது இந்தியா.
ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர்.