INDVSAUS: முதல் ஒருநாள் கிரிக்கெட் பலப்பரிட்சை - இவர் விளையாடவில்லை!
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
INDVSAUS
மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் சர்மா விளையாடவில்லை.
ரோஹித் களமிறங்காததால் ஹர்திக் பாண்ட்யா இப்போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார். ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ளனர்.
யாருக்கு வெற்றி?
இந்திய நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 19ம் தேதி விசாகப்பட்டினத்திலும், மார்ச் 22ம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 5 முறை வெற்றி பெற்றதால், இந்த போட்டியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.