IND vs AUS: தோல்விக்கு காரணம் மோசமான சம்பவம்தான் : கேப்டன் ஸ்மித் ஓபன் டாக்
ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணத்தை அணி கேப்டன் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
திணறிய ஆஸ்திரேலியா
இதில் வான்கடேவில் துவங்கி நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர் மிட்செல் மார்ஷ் 81 (65) மட்டும்தான் அபாரமாக விளையாடினார்கள். மிடில் ஓவரின்போது பந்துகள் மெதுவாக வந்ததாலும், பந்தில் போதிய பவுன்ஸ் இல்லாத காரணத்தினாலும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இந்த போட்டியில் இந்திய அணி 39.5 ஓவர்கள் முடிவில் 191/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
தோல்விக்கு காரணம்
இப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிகொடுத்தார். அதில், வான்கடே மைதானத்தில் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை.வழக்கமா இங்கு நல்ல ஸ்கோர் அடிக்கும் முடியும். ஆனால், இம்முறை இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 250 ரன்களை அடித்திருந்தாலே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.
ஏனெனில், பந்தில் நல்ல ஸ்விங், வேகம் இருந்தது
ஜடேஜா, கே.எல்.ராகுல் இருவரும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். நாங்கள் அபாரமாக பேட்டிங்கை துவங்கினோம். மிட்செல் மார்ஷ் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு பிறகு, நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க ஆரம்பித்தோம். ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. தோல்விதான் இதுக்கு மிக முக்கிய காரணம் எனக் கூறினார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.