பிப்ரவரி மாதத்தில் சாதனைப் படைக்க காத்திருக்கும் இந்திய அணி - உற்சாகத்தில் ரசிகர்கள்

viratkohli msdhoni teamindia
By Petchi Avudaiappan Jan 31, 2022 08:51 PM GMT
Report

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் நடைபெறவுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

இதனிடையே இந்த தொடரில் பங்கேற்பதற்காக விரைவில் இந்திய அணி அகமதாபாத் நகரில் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்க உள்ள முதல் ஒருநாள் போட்டியானது இந்தியாவின் “ஒருநாள் கிரிக்கெட்டில் பங்குபெறும் 1000வது கிரிக்கெட் போட்டியாகும்”

இது ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் ஒரு பெருமை மிகுந்த மகிழ்ச்சியான தருணமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.கடந்த 48 ஆண்டுகளில் இந்தியா மொத்தம் 999 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 518 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 431 தோல்விகளை பதிவு செய்துள்ளது. 9 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் 41 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.