‘‘என்னை குற்றம் சொல்லாதிங்க ஒட்டுமொத்த நாடே திறந்திருக்கிறது’’ - கொரோனா விமர்சனத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி

Irumporai
in கிரிக்கெட்Report this article
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இந்திய அணியின் முகாமுக்குள் கொரோனா தொற்று பரவியதற்கு தான் காரணம் என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதோடு அது தொடர்பாக விளக்கமும் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இந்த தொடரில் நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் ஐந்தாவது போட்டி கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ரத்தானது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பயோ பபூளை கருத்தில் கொள்ளாமல் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டது தான் இந்திய முகாமுக்குள் தொற்று பரவ காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் விமர்சனத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
விமர்சனம் குறித்து பதில் அளித்த ரவி சாஸ்திரி ‘‘ஒட்டுமொத்த நாடே (பிரிட்டன்) திறந்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே எதுவேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம்’’ என்றார்.
மேலும், இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடியதன் மூலம் சிறந்த கோடைக்கால கிரிக்கெட்டை பார்க்க முடிந்தது. கொரோனா காலத்திலும் சிறந்த தொடராக இருந்தது. இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் இந்திய அணி செயல்பட்டது போன்று எந்த அணியும் செயல்பட்டிருக்காது என்றார்.